தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-18 18:37 GMT

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? 

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், முகவனூர் தெற்கு கிராமம், பெரிய அணைக்கரைப்பட்டியில் அரசுக்கு சொந்தமான பெரிய ரெட்டியார் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையை சிலர் ஆக்கிரமித்து செய்து வைத்துள்ளனர். இதனால் குளத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

அடைக்கல ராஜ், பெரிய அணைக்கரைப்பட்டி.

குடிநீர் பற்றாக்குறை 

திருச்சி மாவட்டம், தொப்பம்பட்டி கிராமம் ஆளிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள குடிநீர் குழாய் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளத. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆளிபட்டி.

கிணற்றை சுத்தம் செய்ய கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெரிய அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் கோழி, பூனை என பல்வேறு விலங்குகள் தவறி விழுந்து இறந்து கிடக்கிறது. இதனால் தற்போது கிணறு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மணப்பாறை.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருச்சி மாவட்டம், ஆவராம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்கம்பி அறுந்து விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

சத்தியமூர்த்தி , ஆவராம்பட்டி.

நிழற்குடை வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் செவந்தலிங்கபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலை வசியும் இல்லை. இங்குள்ள சமுதாய கூடம் சீரமைக்கப்படாமலும் இருக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

அபினேஷ், செவந்தலிங்கபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்