தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
பெரம்பலூர் ரோஸ் நகருக்குள் நுழையும்போது வலது புறம் உள்ள தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்லபவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சுரேஷ், பெரம்பலூர்.
ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?
பெரம்பலூர், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவயலூர் ஊராட்சி பழைய விராலிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் நுழைவு பகுதியில் ஊரின் பெயர் பலகை இதுவரை வைக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து கிராமத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஊர் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பழைய விராலிப்பட்டி
சேதமடையும் குடிநீர் குழாய்கள்
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அவ்வை நகர் முதல் தெருவில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணைமின்நிலையம் அடந்து காடுபோல் உள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் திடிரென முறிந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் விழுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், துறைமங்களம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரவிந்தன் நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் நீண்ட காலமாக மழையினால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள், முதியவர்கள் என பல்வேறு தடுப்பினரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சசிகுமார், நக்கசேலம்
கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவுகிறது. இதனால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராயப்பன், மருவத்தூர்