தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-20 18:30 GMT

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை பொன்நகர் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடடேன சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுரேந்தர், வாழவந்தான்கோட்டை.

சேறும், சகதியுமாக மாறிய சாலை 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைகோவில் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் உள்ள வார்டு எண் 41-ல் கடந்த சில மாதங்களாக சாலை பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் தாற்போது பெய்த மழைக்கு அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சங்கரன், திரும்வெறும்பூர்.

சாலை வசதி வேண்டும்

திருச்சி மாநகராட்சி வார்டு எண்-49 சுப்பையா தெரு விஸ்தரிப்பில் உள்ள நாகம்மை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாக்கடை தேங்கி நிற்கிறது. இதனால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்தாஸ், சங்கிலியாண்டபுரம்.

தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் 

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெளியனூர் பஞ்சாயத்து கல்லடிப்பட்டி கிராமத்தில் பள்ளிகூடம் தண்ணீர் தொட்டி அருகே கடந்த 30 நாட்களாக நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கல்லடிப்பட்டி

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வடகாபுத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்