தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-16 18:46 GMT

அரசு கோழி பண்ணை மீண்டும் செயல்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது கோழிப்பண்ணை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. எனவே அந்த கோழிப்பண்ணையை மீண்டும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.

பெயர் பலகையுடன் பஸ் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியே திருச்சி செல்லும் அரசு புறநகர பஸ் முக்கண்ணாமலைப்பட்டி வழி செல்லும் என பெயர் பலகையின்றி செல்கிறது. இதனால் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் கேட்டு பயணிக்க வேண்டியுள்ளது ஆகையால் சமந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையுடன் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா. மூட்டாம்பட்டி கிராமத்தில் சம்பாகுளம் உள்ளது. இந்த குளத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மூட்டாம்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் திருநல்லூரில் இருந்து விராலிமலை செல்லும் முக்கிய சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் திருநல்லூர்- பூமரம் இடையிலான பகுதிகளில் மட்டும் தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழைநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதினால் இரவு நேரத்தில் இந்த சாலையின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ெசந்தில்குமார், திருநல்லூர்.

Tags:    

மேலும் செய்திகள்