தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-16 18:45 GMT

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.சோழன்குறிச்சி கிராமம் புதுத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மறுசீரமைப்பு பணிகள் கூட நடைபெறவில்லை. தற்போது பெய்துவரும் மழையில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் புதிய சாலை அமைத்து சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டு என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், த.சோழன்குறிச்சி.

லாரிகளால் நெரிசல்

அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி புறக்காவல் நிலையம் முன்பு உள்ள சாலையோரங்களில் ஏராளமான லாரிகள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும் சாலைகளில் ஆங்கே பள்ளங்கள் ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.

பொதுமக்கள், அரியலூர்.

குரங்குகள் தொல்லை

அரியலூர் பூக்காரத்தெரு மற்றும் நகர பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிரபாகரன், அரியலூர்.

ஆபத்தான மின்கம்பம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி இராங்குடி கிராமத்தில் உள்ள ஏரி முன் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சித்ரா, இராங்குடி.

Tags:    

மேலும் செய்திகள்