தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-09 18:30 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுந்தராம்பாள் நகரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கழிவுநீர்வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சுந்தாரம்பாள் நகர்.

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

கரூர் மாவட்டம், பாலத்துறை மற்றும் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஏராளமான வாத்து கறி விற்பனை செய்யும் கடைகள், கறிக்கோழி கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோழிக்கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் போட்டுச்செல்கின்றனர். அதேபோல் மருத்துவமனைகளை சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். மேலும் பேக்கரி, மளிகை, டீக்கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும் போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பாலத்துறை.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து கரியாம்பட்டி, ஓலப்பாளையம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், லாரி, இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புன்னம் சத்திரம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆறு சாலை என்ற பகுதி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை புதிதாக போடப்பட்ட தார்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிக்கு தினமும் பல தனியார் கல்லூரி பஸ்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் ஒரு சில தனியார் கல்லூரி பஸ்கள் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் நடந்து செல்வோர் விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி .

Tags:    

மேலும் செய்திகள்