தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இருக்கை வசதி வேண்டும்
அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் திருச்சி, தஞ்சாவூர், சேலம், கடலூர், கும்பகோணம், மயிலாடு துறை உள்பட பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மூலம் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக இருக்கை வசதிகள் பல சேதமடைந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கைகளை சரி செய்யவும், புதிதாக இருக்கை வசதி அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
கால்நடைகளால் தொல்லை
அரியலூர் செட்டி ஏரி கரை மற்றும் சந்தை பகுதி சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகளால் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் நடந்து செல்லவும் பொதுமக்கள், முதியவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை சாலைகளில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரியலூர்.
மயான கொட்டகை வேண்டும்
அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராம் புதுக்காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள யாரேனும் இறந்தால் அவர்களை எரிப்பதற்கு மாயனா கொட்டகை இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், முத்துசேர்வாமடம்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை சேகரிக்க முடியாததால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மீன்சுருட்டி.
தெருநாய்களால் தொல்லை
அரியலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தை கள், பெண்களை கடிக்க வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க வருவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.