தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மெகா பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் இருந்து சோபனபுரம் செல்லும் பிரதான சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டு பல நாட்களாக சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தினசரி விபத்துகளில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிலியபுரம்.
பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் சமையலறை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரபெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கூடத்தில் உள்ள சத்துணவு சமையலறை கூடம் பாழடைந்த கட்டிடத்தில் ,சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வைரபெருமாள்பட்டி
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கலிங்கமுடையான்பட்டி பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மகேஷ்வரன், துறையூர்
சாலையை உயர்த்தி அமைக்க கோரிக்கை
திருச்சி செந்தண்ணீர்புரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து பிச்சை நகர் செல்லும் சாலை அதிக இறக்கமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
முகமது இக்பால், செந்தண்ணீர்புரம்.
மின்கம்பத்தில் முளைத்துள்ள செடி, கொடிகள்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மேரிஸ் நகர் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் வழியாக செல்லும் ஒயர்களில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் அந்த எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மேரிஸ் நகர்.