தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-01 14:32 GMT

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள சூரப்பட்டியில் இருந்து அம்மாபட்டி செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையை புதிய தார்சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முருகேசன், சூரப்பட்டி.

நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரனூர்.

அங்கன்வாடிகளில் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடிகள் உள்ளன. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகி்ன்றனர். ஆனால் அங்கன்வாடிகளில் போதிய பணியாளர்கள் இல்லாமல் ஒரே பணியாளரே அனைத்து அங்கன்வாடிகளையும் கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.

பயனற்று கிடக்கும் அடிபம்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோவனூர் ஊராட்சி, மேக்கினிப்பட்டி ஆதிதிராவிடர் நல குடியிருப்பு பகுதியில் ஒரு அடிபம்பு மக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அடிபம்பு நீண்ட நாட்களாக பயனற்று கிடக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தாததால் அடிபம்பை சுற்றிலும் புல் மற்றும் செடிகள் முளைத்துள்ளன. இதனால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களும் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடிபம்பை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேக்கினிப்பட்டி.

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ரெயில் சென்ற பிறகு கேட் திறந்தவுடன் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் முந்தியடித்து கொண்டு செல்கிறது. இதனால் வாகனங்கள் நெரிசல் மற்றும் நெரிசலில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரபீக் ராஜா, திருவப்பூர்.

Tags:    

மேலும் செய்திகள்