தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சர்வீஸ் சாலை சரிசெய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலம் இருபுறமும் இறங்கி வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இடதுபுறம் திரும்பி வருவதற்கு பதிலாக, வலதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலை வழியே வருகிறது. அப்போது எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதில் பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இடதுபுறம் வாகனங்கள் திரும்ப ஏதுவாக சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் அல்லது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உத்தமர்கோவில்,
ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திம்மராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்று கரையோர பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திம்மராயசமுத்திரம்
ஆபத்தான மின்கம்பம்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அச்சமுடனே சென்று வருகின்றனர். மேலும், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை டுக்க எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பைஞ்சீலி.
சாலையில் பள்ளம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா முள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முள்ளிப்பட்டி
பாதாள சாக்கடையில் கலக்கும் குடிநீர்
திருச்சி, பொன்மலை கோட்டம் பீமநகர் முறுக்கு கார தெரு பண்டரிபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் உடைந்து பாதாள சாக்கடையில் குடிநீர் கலக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பீமநகர்