தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மதுபிரியர்கள் அட்டகாசம்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிக்கு எதிரில் மது பிரியர்கள் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு சாலையின் நடுவே பாட்டில்களை உடைத்து சென்று விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சிறுவாச்சூர்.
சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை பஸ் நிற்கும் இடத்திற்கு தெற்குப் பகுதியில் காலியிடம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
வடிகால் வசதி வேண்டும்
பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் கிராம ஊராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட விளாமுத்தூர் வடக்கு தெருவான காலனி தெருவில் கழிவுநீர், மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைத்தரப்படவில்லை. இதனால் வீடுகளின் முன்பு கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நொச்சியம்.
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் நாய்களை கண்டால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் கால்நடைகளையும் நாய்கள் கடித்து விடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர்களும் கவலையடைந்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், குரும்பலூர்.
இணைப்பு சாலை அமைக்கப்படுமா?
பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தையில் நடைபெறுவதால் இருபுறமும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உழவர் சந்தை எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் உழவர் சந்தை அருகே தார் சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால் வடக்கு மாதவியின் சாலையிலிருந்து நகருக்கு மற்றும் வெளி பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். இதனை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.