தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-30 18:52 GMT

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள ஏரிகளை கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. இவற்றால் மழை பெய்யும்போது ஏரிகளில் மழைநீர் தேங்கி நிற்க வழியின்றி இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாய பயன்பாட்டிற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலத்தூர், பெரம்பலூர். 

Tags:    

மேலும் செய்திகள்