தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையில் இருந்தும் பஸ் வசதி கிடையாது. இதனால் கிராம மக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம், தோகைமலை ஒன்றிய அலுவலகம் செல்லவேண்டுமானால் திருச்சி சென்று தான் போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே முதலைப்பட்டி கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையிலிருந்தும் பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குளித்தலை, கரூர்.
வேக்கத்தடை அமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம் ஈசநத்தம் பொன்னகர் மெயின் சாலையில் நான்கு வழி சாலைகள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் சில நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக கொள்கிறோம்.
கிருஷ்ணன், ஈசநத்தம், கரூர்.