தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-26 19:08 GMT

பங்குனி வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பங்குனி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் பூவாலூர், காட்டூர், கொத்தமங்கலம், சிருமயங்குடி, மேட்டுப்பட்டி, கோமாக்குடி, சேம்ரை, தின்னியம், ஆலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. எனவே பாசன வசதிக்காக உடனடியாக வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஜென்சி, லால்குடி.

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் கோனார் தெருவில் ஏராளமான கறிக்கடை, மீன்கடைகள் உள்ளன. இங்கு கடைகளில் வீணாகும் கறிக்கழிவுகளை சிலர் மழைநீர் கால்வாயில் கொட்டி வருகின்றனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

ரம்யா, திருவெறும்பூர்.

தெருநாய்களால் தொல்லை

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டபட்டி தெற்கு தெரு அடைக்கலமாதா ஆலயப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு அந்த வழியாக செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இன்னசரி, நலூர் குட்டபட்டி, திருச்சி.

சாலையின் நடுவே பெரிய பள்ளம் 

திருச்சி ஜங்சன் பாரதியார் சாலையில் ஒரு இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிய பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுபா, திருச்சி.

Tags:    

மேலும் செய்திகள்