தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-24 18:17 GMT

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் நகராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள ரெங்கா நகர் 7-வது தெருவில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பாம்புகளும் வந்து செல்கின்றன. மேலும் குப்பைகள் அகற்றப்படாமல் சில நேரங்களில் தீ வைத்து கொளுத்துவதால் பிளாஸ்டிக் துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் சுவாசிப்பதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர். 

Tags:    

மேலும் செய்திகள்