தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-23 18:22 GMT

தெருநாய்களால் தொல்லை

திருச்சி தாத்தாசாரியார் குடியிருப்பு பகுதி, மாம்பழச்சாலை அருகில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளை கடிக்க வருவதினால் அவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குமார், மாம்பழச்சாலை, திருச்சி.

எரியாத தெரு விளக்குகள்

திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் முருகன் கோவில் கொள்ளிடக்கரை சாலை முதல் ரெயில்வே சுரங்கப்பாதை வரை கடந்த ஒருவாரமாக தொடர்ந்து தெருவிளக்குகள் எரியவில்லை. இந்த சாலை பொதுமக்கள் பயன் படுத்தும் முக்கிய சாலையாகும். இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இந்த சாலையில் பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சட்ட விரோத செயல்கள் நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம், திருச்சி.

தேங்கி நிற்கும் மழைநீர்

திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் 6-வது மெயின்ரோடு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர் வடிந்து செல்ல வழியின்றி பல நாட்களாக நிற்பதினால் பாசி படிந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சீனிவாசநகர், திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்