தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-22 18:35 GMT

உயர்மின் கோபுரம் அமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் கொடுக்கவும், விசாரணைக்காவும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் போலீஸ் நிலையம் முன்பு இரவு நேரங்களில் வெளிச்சம் எதுவும் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு வருபவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போலீஸ் நிலையம் முன்பு சுற்றுச்சுவர் அமைத்து, உயர்மின் கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சகானா, கயர்லாபத், அரியலூர்.

குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே ஆண்டாள் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல நடைபாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என கேட்டுக் கொள்கிறோம்.

இந்து, ஜெயங்கொண்டம். அரியலூர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

பெரம்பலூர் மாவட்டம் , குன்னம் வட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித் வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் அதிக காற்று அடிக்கும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வரகூர், பெரம்பலூர்.  

Tags:    

மேலும் செய்திகள்