தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-18 19:02 GMT

போக்குவரத்து நெரிசல்

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள யாத்ரி நிவாஸ் செல்லும் சாலையில் கடைகளின் முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மயான எரிவாயு தகனமேடை, குடிசை மாற்று வாரிய பகுதிக்கு செல்லும் மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், யாத்ரி நிவாஸ், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையான வில்லியம்ஸ் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி புறநகர் கிளை அலுவலகத்தின் நேர் எதிரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. மேலும் அதனை தாங்கியுள்ள துணை கம்பமும் முழுமையாக சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. எனவே, திருச்சியின் மிக முக்கியமான சாலையான இந்த சாலையில் அன்றாடம் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆகவே மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்துள்ள ஆபத்தான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அன்பழகன், ஸ்ரீரங்கம், திருச்சி.

மின்தடையால் மக்கள் அவதி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பூனாம்பாளையம், கல்மால்பாளையம், சம்பாளையம் உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதினால் இப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பூனாம்பாளையம், திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்