தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-18 18:57 GMT

கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கிழுமத்தூரில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்மணிகளை விற்பனைக்கு வேண்டி நன்னை நுகர்பொருள் விற்பனை மையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்தும், இதுவரை கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நெல்மணிகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

சேகர், கிழுமத்தூர், பெரம்பலூர்.

Tags:    

மேலும் செய்திகள்