தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-14 17:58 GMT

தெருநாய்களால் தொல்லை

புதுக்கோட்டை நகர பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினாலும், இரு சக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதினாலும் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதி ஏடி காலனி பகுதியில் ஒரு சில வீடுகளுக்கு மட்டும் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெருமாள், சம்மட்டிவிடுதி, புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்