தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-07 18:10 GMT

குடிநீர் இன்றி மக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், அங்கராயநல்லூர் பஞ்சாயத்து, உத்திரக்குடி கிராமத்தில் சாலையோரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி ஆபரேட்டரை தனிநபர் ஒருவர் மிரட்டி தனது வீட்டிற்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உத்திரக்குடி, அரியலூர்.

ரேஷன் கடை அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டுவருகிறது. இந்த ரேஷன் கடையில் 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பதிவு உள்ளன. பல்வேறு நேரங்களில் செங்குணம் (கிழக்கு), செங்குணம் (மேற்கு) என குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுடன் பொருட்களை பெற்று செல்கின்றனர். இதனால் இந்த ரேஷன் கடையை பிரித்து செங்குணம்(கிழக்கு) அண்ணா நகர் பகுதியில் 2014-2015-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறு தானிய கிடங்கு கட்டிடத்தில் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள நீர்நிலைகளான அய்யனார்குளம், ஆண்டிஏரி, வண்ணான்ஏரி, குட்டைகரை ஆகிய ஏரிகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை பெய்யும்போது மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு, வெயில் காலங்களில் நிலத்தடிநீர் குறைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தா.பழூர், அரியலூர். 

Tags:    

மேலும் செய்திகள்