தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-05 19:29 GMT

சிதிலமடைந்த சாமி சிலைகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் வேலமலையாண்டி கோவில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருப்பணி நடைபெற்றது. தற்போது அங்குள்ள குதிரை சிலைகள் மற்றும் சாமி சிலைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவிலுக்கு என 15 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செட்டியப்பட்டி, திருச்சி.

பஸ் பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து தொட்டியம், நாமக்கல் வழியாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகரப் பயணியர் பஸ்கள் முசிறி புதிய பஸ் நிலையம் வந்து பயணிகளை இறக்கியும், ஏற்றியும் செல்ல வேண்டும். அதேபோல் எதிர் மார்க்கத்தில் இருந்து முசிறி வழியாக செல்லும் பஸ்களும் முசிறி புதிய பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும். தற்போது முசிறி பஸ் நிலையத்தினுள் பஸ்கள் உள்ளே வராமல் வெளியேயே பயணிகளை இறக்கியும், ஏற்றியும் செல்கின்றனர். புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரும் என காத்திருந்து பயணிகள் ஏமாற்றமடைந்து பஸ் நிலையத்தின் வெளியே சென்று தான் திருச்சி மற்றும் நாமக்கல் செல்கிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முசிறி, திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் காலப்போக்கில் தூர்ந்துபோன நிலையில் தற்போது கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அலெக்ஸ், திருச்சி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அழுகிய பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை ஏராளமாக கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், காந்தி மார்க்கெட், திருச்சி.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருச்சி பழைய பால்பண்ணை அருகே சாலையில் பலமாக உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதினால் சாலையில் இருக்கும் பள்ளத்தின் அளவு தெரியாமல் அதில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து வருகின்றன. மேலும் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது இருப்பதை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் அடிப்பதனால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்கள், பழைய பால்பண்ணை, திருச்சி.

Tags:    

மேலும் செய்திகள்