வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது..!
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்துள்ளது.
சென்னை,
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, குறைந்தும் வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் ரூ.2,009-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.