விளாத்திகுளத்தில் சூறாவளி:மின்கம்பம் சாய்ந்து மொபட் சேதம்
விளாத்திகுளத்தில் சூறாவளி காற்றுக்கு மின்கம்பம் சாய்ந்து மொபட் சேதம் அடைந்தது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் பகுதியில் நேற்று சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும்சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் சிதம்பரம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஷோரூம் முன்பு கூலிதொழிலாளியான ரவி என்பவரின் புதிய மொபட்டை நிறுத்தியிருந்தார். அப்போது வீசிய பலத்த காற்றுக்கு ஷோரூம் அருகிலிருந்த மின்கம்பம் ஒன்று திடீரென முறிந்து மொபட் மீது விழுந்தது. இதில் மொபட் பலத்த சேதமடைந்தது. ரவி சற்று தொலைவில் நின்று கொண்டிருந்ததால் உயிர் தப்பினார்.