ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட சைக்கிள் நிறுத்தம் திறப்பு
ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட சைக்கிள் நிறுத்தம் திறக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கரியாப்பட்டினத்தில் அரசு மேநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்கள் தங்களுடைய சைக்கிளை நிறுத்துவதற்கு போதுமான வசதி இல்லை. இந்த நிலையில் ஊரக வளர்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதிதாக சைக்கிள் நிறுத்தம் கட்டப்பட்டது. இதை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கரியாப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பார் சத்தியமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் மாரியப்பன் மற்றும் பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.