ஜம்மணஅள்ளி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-செந்தில்குமார் எம்.பி. வழங்கினார்

Update: 2022-09-20 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள ஜம்மணஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தரராசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாரதி, உதவி தலைமை ஆசிரியர் அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், பொறுப்பாளர்கள் தென்னரசு, சிவராஜ், கங்காதரன், அசோகன், ஜடையன், அண்ணாதுரை, சின்னசாமி, கார்த்திக்ராஜ், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்