பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட மர்ம நபர்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-11-17 21:49 GMT

எடப்பாடியை சேர்ந்த ஒருவரின் செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த 15-ந் தேதி ஒரு தகவல் வந்தது. அதில், குறிப்பிட்ட ஒரு வங்கியின் கணக்கிற்கு ரூ.500 உடனடியாக அனுப்புமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் உனது மனைவி மற்றும் சகோதரியின் படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பணம் எதுவும் அனுப்ப முடியாது என்று தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து வாட்ஸ்-அப்பிற்கு தகவல் அனுப்பிய நபர், புதிதாக ஒரு பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில், எடப்பாடியை சேர்ந்த நபரின் மனைவி மற்றும் சகோதரியின் படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் படத்தை முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்