மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
சிவகங்கை அருகே மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டை அரசு உதவிபெறும் கே.எம்.எஸ்.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் இணையதள குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை மகாலெட்சுமி தலைமை தாங்கினார். சைபா் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சைபர் கிரைம் தொழில் நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார், முதல்நிலை காவலர் சாணக்கியன் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் ஏற்படுவதற்கான காரணம், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்கள். மேலும் சைபர் குற்றங்கள் குறித்து கட்டணமில்லாத தொலைபேசிஎண் 1930-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்கள். நிகழ்ச்சியில் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.