ரியல் எஸ்டேட் அதிபருக்கு வெட்டு

குலசேகரன்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை அரிவாளால் வெட்டிய மூன்று வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-09-03 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

பிறைகுடியிருப்பு ராமசாமிதர்மபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று மதியம் உடன்குடியிலிருந்து குலசேகரன்பட்டினத்திற்கு மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டிருந்தார். இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் செல்வராஜை திடீரென்று வழிமறித்து நிறுத்தியுள்ளனர். கண்இமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவரை சராமரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் செல்வராஜை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 வாலிபர்களை தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்