தந்தைக்கு அரிவாள் வெட்டு; மகன் கைது

தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-23 20:56 GMT

சோமரசம்பேட்டை:

ராம்ஜிநகர் அருகே உள்ள இனாம்குளத்தூர் காவக்கார தெருவை சேர்ந்தவர் மணி என்ற வேலாயுதம்(வயது 55). இனாம்குளத்தூர் முனியப்பன் கோவில் பூசாரி. இவருக்கு பெரியண்ணன் என்ற சதீஷ்(35) என்ற மகனும், சுமதி, லெட்சுமி என 2 மகள்களும் உள்ளனர். லெட்சுமி தனது குழந்தைகளுக்கு நாளை (இன்று) வீரப்பூரில் காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதையறிந்த சதீஷ் நேற்று தனது தந்தை வீட்டிற்கு சென்று அவரிடம், நீ லெட்சுமி வீட்டு காதணி விழாவுக்கு செல்லக்கூடாது என்று கூறி, வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்குள்ள பொதுமக்களிடமும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து சதீஷ், மணியை அரிவாளால் வயிற்றில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணியை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்