காதல் தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு

செய்யாறு அருகே காதல் தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-06-18 12:36 GMT

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் ெசய்யாறு அருகே தென்கழனி கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் அஜித்குமார் (வயது 19).

அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன்கள் லோகேஷ் (24), சுரேஷ் (20).

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அஜித்குமாரின் தங்கையை லோகேஷ் காதலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அஜித்குமார் ஏரித்தாங்கல் ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் அஜித்குமாரிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்குமாரின் கையில் வெட்டியுள்ளனர்.

இதில் காயமடைந்த அஜித்குமார் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ், சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்