வடலூரில்போலீஸ்காரருக்கு கத்தி வெட்டுவாலிபர் கைது

வடலூரில் போலீஸ்காரரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-23 20:08 GMT


வடலூர், 

வடலூர் பார்வதிபுரம் வெங்கடாசலம் மகன் கலைவாணன் (வயது 34). இவர் நேற்று மாலை வள்ளலார் சபை திடல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பார்வதிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோகுல் ராஜன் (27) கத்தியை காட்டிமிரட்டி, ஆயிரம் ரூபாய், அவர் அணிந்திருந்த கைகடிகாரத்தை பறித்தார்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சாஸ்தாநாதன், கோகுல்ராஜனை பிடிக்க முயன்றார். அப்போது கோகுல்ராஜன் போலீஸ்காரரின் இடதுகை மணிக்கட்டு பகுதியில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் அவரை போலீஸ்காரர் மடக்கி பிடித்து, வடலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோகுல்ராஜனை கைது செய்தனர். இதற்கிடையே கத்தியால் வெட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் சாஸ்தாநாதன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்