தேன்கனிக்கோட்டை அருகேஅரசு பள்ளி வளாகத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எஸ்.குருபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர். இதனிடையே பள்ளி வளாகத்தில் இருந்த 3 மரங்களை தலைமை ஆசிரியர் நாராணப்பா வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பள்ளி அருகே திரண்டனர். இதுகுறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகன், கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா ஆகியோரிடம் புகார் செய்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.