பழமை வாய்ந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றம்
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பழமை வாய்ந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
செங்கம்
செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அகற்றாத கடைகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செங்கம் நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழமை வாய்ந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர்.
இதையொட்டி காலை முதல் பிற்பகல் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
மேலும் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மில்லத் நகர் வரையிலும் உள்ள சாலையோர கடைகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.