வீட்டில் இறந்து கிடந்த சுங்கச்சாவடி ஊழியர்

சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் இறந்து கிடந்தார்.

Update: 2023-02-01 19:58 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). வையம்பட்டி அருகே கிடங்குடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி செந்தில்குமாரின் வீடு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, செந்தில்குமார் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்