வாடிக்கையாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு
கடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை நடக்கிறது
கடலூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். சார்பில் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் கடலூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி மெயின் அலுவலகத்தில் நடக்கிறது. கருத்தரங்கில் பி.எஸ்.என்.எல். வழங்குகிற சேவைகள் பற்றியும் சந்தேகங்களையும் பங்கேற்று தெரிந்து கொள்ளலாம்.
இதில் நேரிலும், இணைய தளத்திலும் கலந்து கொள்ளலாம். இணைய வழியில் பங்கேற்பதற்காக துணை கோட்ட பொறியாளர் பழனிவேலை (விற்பனை பிரிவு) தொலைபேசி எண்-9489940992 தொடர்பு கொண்டு இணைப்பை பெறலாம். ஆகவே வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கடலூர் பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.