மதுரையில் 'கிரேட் பாம்பே சர்க்கஸ்'

மதுரையில் நடந்து வரும் கிரேட் பாம்பே சர்க்கஸ் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

Update: 2022-06-20 20:27 GMT


மதுரையில் நடந்து வரும் கிரேட் பாம்பே சர்க்கஸ் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

பாம்பே சர்க்கஸ்

மதுரை மூன்றுமாவடி சி.எஸ்.ஐ. சர்ச் மைதானத்தில் ஏழாம் அறிவு திரைப்பட புகழ் " தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'' நடந்து வருகிறது. தினமும், மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடக்கிறது. இதில், கிளி, புறா மற்றும் நாய்கள், பல்வகையான வித்தைகளை காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர். இதுபோல், அந்தரத்தில் ஆண்கள், பெண்களின் சாகசம், ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம், ஸ்கைவாக், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கசில் இடம் பெற்றுள்ளன. இதுபோல், பந்துகளை லாவகமாக பிடிக்கும் விளையாட்டு, கத்தியின் மீது சாகசம், கப் அன் சாசர் விளையாட்டு, ஜோக்கர்களின் நகைச்சுவை விளையாட்டுகள் இந்த சர்க்கசில் சிறப்பு அம்சமாகவும், குழந்தைகளை கவரும் வகையிலும் உள்ளது.

4-ந்தேதியுடன் நிறைவு

இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனம் 100 ஆண்டுகளை கடந்து மூன்றாவது பரம்பரையாக தொடர்கிறது. ஆப்கானிஸ்தான், துருக்கி உள்பட பல வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், தமிழகத்தில் பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம். மதுரையிலும் இதற்கு முன்பு பல முறை சர்க்கஸ் நடத்தி இருக்கிறோம். இதில், பிளையிங் பார், ரோலர் ஸ்கேட்டிங், கேன்டில், போன் லெஸ், கப் சாசர் என 30-க்கும் மேற்பட்ட சாகசங்களை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரிய லாபம் இல்லை என்றாலும் பரம்பரை தொழிலாக இருப்பதால் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

மதுரையில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் மழையின் காரணமாக எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சர்க்கஸ் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. எனவே, மதுரை மக்கள் இந்த சர்க்கசை கண்டு களித்து, சர்க்கஸ் தொழில், கலைஞர்களை காக்க வேண்டும் என்றனர்.

குழந்தைகளுக்கு நல்ல பொழுது போக்கு அம்சங்களுடன் இருப்பதால், தினமும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்