கடலூர்புறநகர் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்குடியிருப்போர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் புறநகர் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குடியிருப்போர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Update: 2023-01-11 18:45 GMT


அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், கண்ணபிரான், பன்னீர்செல்வம், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் மருதவாணன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் போராடி பெற்ற தமிழ்நாடு என்ற நம் மாநிலத்தின் பெயரை தமிழகம் என்று மாற்ற முயற்சிக்கும் கவர்னரின் கூற்றை திரும்பபெற வேண்டும். புறநகர் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் மாநகராட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்து, கலெக்டர் அலுவலகம் அருகிலேயே அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுகளிலும், நகர் பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை எரிக்காமல், பாதுகாப்பாக அப்புறப்படுத்தி மக்கள் புகையில்லா போகி கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் சாலை விபத்துகள் அதிகமாகி வரும் சூழலில் விபத்தில்லா போக்குவரத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் 6-வது மாநாட்டை ஏப்ரல் மாதம் சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்