கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-02 18:45 GMT

கூடலூர்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நிலவும் முறைகேடுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி கூடலூர் நகராட்சி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் பிரோஸ்கான் தலைமை தாங்கினார். செயலாளர் ஷிஹாபுத்தீன் வரவேற்றார். மேற்கு மாவட்ட பொது செயலாளர் சக்கீர் ஹுசைன் மற்றும் செயலாளர் ரபீக், மாவட்ட தலைவர் அப்துல் கபூர் செயலாளர் ரபீக், நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியை நாடும் மக்களின் அடிப்படை தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் பாடந்துறை கிளை செயலாளர் ஷிஹாப் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்