விபத்தில் பெண் பலி லாரி டிரைவருக்கு ஓராண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

விபத்தில் பெண் பலியான வழக்கில் லாரி டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டைன விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-12-30 18:45 GMT

கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சகுந்தலா (வயது 58). இவர் கடந்த 1.10.2020 அன்று கடலூர் குண்டுசாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவுக்கு எதிரே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று சகுந்தலா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார், லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் மாவல்வாடி அருங்குணத்தை சேர்ந்த ஏழுமலையை(49) கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாகரன் தனது தீர்ப்பில், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ஏழுமலைக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் சிவகாமி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்