போக்குவரத்து பணிமனையை மாற்றி விட்டு பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் நகை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

போக்குவரத்து பணிமனையை மாற்றி விட்டு பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று நகை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2022-05-24 17:12 GMT

கடலூா்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடலூர் நகர நகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூப்சந்த் ஜெயின், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் பாபுலால் மற்றும் நிர்வாகிகள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. தற்போது அதை வேறு இடத்துக்கு மாற்ற ஆய்வு நடந்து வருகிறது. ஆனால் தற்போதைய பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.

இந்த பணிமனையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பணிமனையை கலெக்டர் அலுவலகம் அருகில் மாற்றம் செய்யலாம்.

இது பற்றி பொது நல அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பஸ் நிலையத்தை மாநகரை விட்டு மாற்ற வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்