பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

நெல்லையில் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-09-27 19:19 GMT

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் காலாண்டு விடுமுறை தொடங்கியதை அடுத்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரெயில்களிலும் பயணிக்க வழக்கத்தை விட பயணிகள் குவிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்