புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையையொட்டி பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே பொதுமக்களின் நலனுக்காக வேலூரில் இருந்து சென்னை பூந்தமல்லி, திருச்சி, பெங்களூரு என பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் வேலூரில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பஸ்களில் சிறப்பு பஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த பஸ்கள் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பயணிகள் மீண்டும் வேலூர் திரும்ப இயக்கப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.