கானாடுகாத்தான் பேரூராட்சி சாதாரண கூட்டம்

கானாடுகாத்தானில் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-27 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ராதிகா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சோலைராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார். கணக்காளர் ரவிச்சந்திரன் தீர்மானங்களை விளக்கி வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாண்டிசெல்வன், கருப்பையா, செட்டிநாடு பாலு, ராமசாமி, அன்புக்கரசி, கற்பகம், சாந்தி, சுரேகா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டி வரி பாக்கிளை தவறாமல் வசூல் செய்வதும் என்றும், பேரூராட்சிக்கு வருவாயை பெருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் முன் வைக்கப்பட்டது. மேலும் 2021-22-ம் ஆண்டின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பேரூராட்சி பகுதி முழுவதும் சாலை வசதி, ஆழ்துளை கிணறு அமைத்தல், ஊருணி குடிமராமத்து பணி மேற்கொள்ளுதல், குடிநீர் பைப் விஸ்தரிப்பு செய்தல், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையும் மன்றத்தின் பார்வைக்கு எடுத்து கூறப்பட்டது. அதன் பின்னர் பேரூராட்சி தலைவர் கூறியதாவது:- கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கானாடுகாத்தான் பேரூராட்சி முழுவதும் தடையின்றி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்