கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில், பால் உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் நசீர்அகமது, வெங்கடேசன், கணேசன், அனுமந்தராசு, சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சங்க தலைவர் ராமகவுண்டர் பேசுகையில் தமிழக அரசு பால் பொருட்களான நெய், வெண்ணை, பால்பவுடர் போன்ற பாலில் இருந்து உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு விலையேற்றம் செய்திருக்கிறது. இது வெளிமாநிலங்களில் இருப்பதைவிட தமிழக அரசு ஏற்றிய விலை உயர்வு என்பது மிக மிகக் குறைவு. இன்னும் கூடுதலாக விலையை ஏற்றி இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த சிறிய விலை ஏற்றத்தை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், பால் லிட்டர் ஒன்றுக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உற்பத்தி மானியம் ரூ.6 வழங்கி, ஐ.எஸ்.ஐ. பார்முலா முறையில் பரிசோதனை செய்ய வேண்டும். பால் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் விலையேற்ற வேண்டும். அதே போல், தீவனத்தை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். பால் பொருட்களின் விலையேற்றம், பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.