குருசு மலை மாதா ஆலய திருவிழா

வாசுதேவநல்லூர் அருகே குருசுமலை மாதா ஆலய திருவிழா நடந்தது.

Update: 2022-05-30 12:56 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் குருசுமலை மாதா காட்சி கொடுத்த திருத்தலத்தில் திருவிழா நடந்தது. முக்கிய திருநாளான நேற்று முன்தினம் மாலை திருப்பலி நடந்தது. இரவு 7 மணிக்கு டாக்டர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் பேரவை சார்பாக அசன விருந்து நடைபெற்றது. அசன விருந்தை ஏ.வி.கே. கல்விக்குழும தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, எஸ்.அய்யாத்துரை பாண்டியனை பங்குத்தந்தை அருள் லூர்து எட்வின் மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஊத்துமலை ஜமீன் குமரேசராஜா, பேரவைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் வேலாயுதபுரம், நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்த ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்