விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி

கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-09-14 18:15 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2022-2023-ம் ஆண்டுக்கான சம்பா பருவத்திற்கு விவசாய பயிர்க்கடன் ரூ.4.50 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக ரூ.65.45 லட்சம் மதிப்பில் 100 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சிவா, துணைத்தலைவர் ரவிக்குமார், இயக்குனர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலியபெருமாள், தமிழ்வாணன், ஜெயந்தி, சங்க செயலாளர் அமிர்தம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்