தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படும் என்றும், இங்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும்கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-11 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படும் என்றும், இங்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும்கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்றும், நாளையும் செயல்படும்

தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பசல் பீமாயோஜனா திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய ஏதுவாக விடுமுறை நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும்.

எனவே இதுவரை பயிர்காப்பீடு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சென்று காப்பீடு செய்துகொள்ளலாம்.

கடைசி நேர நெருக்கடி

கடைசிநேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக விடுமுறை நாட்களில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சென்று காப்பீடு செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்