திருச்சி அய்யன் வாய்க்காலில் முதலை நடமாட்டம்
திருச்சி அய்யன் வாய்க்காலில் முதலை நடமாடுவதாக வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அய்யன் வாய்க்காலில் முதலை நடமாடுவதாக வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததை தொடர்ந்து மேட்டூர் அணை நிரம்பியது. அங்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் திருச்சியை அடுத்த முக்கொம்புவுக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மேலணையிலிருந்து பிரியும் அய்யன் வாய்க்கால், பெருவளை மற்றும் புள்ளம்பாடி பாசன வாய்க்கால்களிலும் வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.
முதலை நடமாட்டம்
இந்நிலையில் திருச்சியை அடுத்த சிறுகாம்பூர் அருகே அய்யன் வாய்க்காலில் முதலை ஒன்று இருப்பதாகவும், அது அவ்வப்போது மேடான பகுதிக்கு வந்து மக்கள் கண்ணில் தென்பட்டு அச்சுறுத்துவதாகவும் செல்போன் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அய்யன்வாய்க்காலில் குளிக்க அச்சம் அடைந்து வருகின்றனர்.