குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்:திருச்சி கோர்ட்டில் நேற்று குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட சசிக்குமார், பிரபு ஆகிய 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் வக்கீல் வெங்கட் வெற்றிபெற்றார்.